உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு காட்டில், பெண் ஒருவர் தனது வளர்ப்பு நாயை புனித கங்கை நதியில் குளிப்பாட்டிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்த அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள், கங்கை நதி புனிதமானது என்றும் அங்கு விலங்குகளைக் குளிப்பாட்டக் கூடாது என்றும் தடுத்தனர். ஆனால், அந்தப் பெண் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தொடர்ந்து நாயைக் குளிப்பாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவத்தால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் மத்தியில் இருவேறு கருத்துகள் எழுந்துள்ளன. “புனிதமான இடத்தில் இப்படி செய்வது மத நம்பிக்கைகளை அவமதிக்கும் செயல்” என்று ஒரு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
<a href="http://

“>

அதே சமயம், “இயற்கை மற்றும் நதிகள் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, விலங்குகளுக்கும் அதில் உரிமை உண்டு” என்று மற்றொரு தரப்பினர் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். கங்கையைச் சுத்தம் செய்யக் கோரும் அமைப்பினர், இது போன்ற செயல்களில் ஈடுபடும்போது உள்ளூர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.