இந்தியத் துறவி ஒருவர் நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாத் கோயிலுக்குச் செல்வதற்காகத் தனது வழக்கமான பாதையைத் தவிர்த்து, மிகவும் கடினமான முறையில் பக்திப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர் பசுபதிநாத் தரிசனத்தைப் பெற முழு தூரத்தையும் தரையில் படுத்து, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தபடியே கடந்துள்ளார்.

இந்தியாவில் தொடங்கிய இக்கடினமான ஆன்மீகப் பயணத்தை முழுமையாக முடித்துக் கோயிலை சென்றடைய அந்தத் துறவிக்கு சுமார் ஏழு மாதங்கள் ஆகியுள்ளன.

பரபரப்பான சாலைகளில் அவர் பயணிப்பது ஆபத்தானது என்பதால், நேபாளப் போக்குவரத்துக் காவல்துறை அவருக்கு முழு பாதுகாப்பு வழங்கி, வாகன நெரிசலைச் சீர்செய்து வழிநடத்தியுள்ளது.

இந்த அசாத்திய பக்திப் பயணத்தின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பயங்கரமாக வைரலாகி வருகிறது. 7 மாதங்களாகத் தொடர்ந்து தரையில் படுத்து நகர்ந்து செல்வதற்கு அபாரமான மன மற்றும் உடல் வலிமை தேவை என்பதால், ஜிம்மிற்குச் செல்பவர்கள் கூட அந்தச் சாதுவின் உடற்தகுதியைக் கண்டு வியந்து பாராட்டி வருகின்றனர்.

“>

 

இணையவாசிகளின் பாராட்டுகளையும் நேபாளக் காவல்துறையினரின் பெருந்தன்மையான செயலுக்கான வாழ்த்துகளையும் பெற்றுள்ள இக்காணொளி, தற்போதைய சமூக வலைத்தளங்களின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.