வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர், தான் இருப்பது வெளிநாடு என்பதை மறந்து அங்கிருந்த ஆண் காவலர் ஒருவரின் மீது எச்சில் துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தின் முன் ஆண், பெண் என்ற பாகுபாடு கிடையாது என்பதையும், அதிகாரிகளை அவமதிப்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதையும் உணர்த்தும் வகையில், அந்தப் பெண் எச்சில் துப்பிய அடுத்த நொடியே காவலர் அவரைத் தடுத்து நிறுத்தி, தரையில் தள்ளித் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
She deserved it. pic.twitter.com/Fx5SOjNT52
— Sara Alice 💝 (@Sarah_kally1) January 3, 2026
கடுமையான ஒழுக்க விதிகளையும் சட்டங்களையும் பின்பற்றும் வெளிநாடுகளில், பாலினத்தைக் காரணம் காட்டி சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது என்பதை இந்த நிகழ்வு உறுதிப்படுத்துகிறது. இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் இவ்வாறு நடந்து கொண்டதும், அதற்கு அந்த நாட்டுப் காவல்துறை உடனடியாக எதிர்வினை ஆற்றியதும் தொடர்பான காணொளி தற்போது இணையத்தில் மிக வேகமாகப் பகிரப்பட்டு விவாதங்களை உருவாக்கி வருகிறது.
