ஒவ்வொரு ஆண்டும் தனது மகனின் பிறந்தநாளின் போதும், இந்தத் தாய் அவனை அழைத்துக்கொண்டு தந்தை உறங்கும் கல்லறைக்குச் செல்கிறார். அங்கு தந்தை தனக்காக வைத்துவிட்டுச் சென்ற ‘பிறந்தநாள் பரிசை’ அந்தச் சிறுவன் ஆசையோடு எடுக்கிறான். தந்தை மறைந்துவிட்டாலும், மகனின் நினைவில் அவர் எப்போதும் வாழ வேண்டும் என்பதற்காகவும், தந்தையின் அன்பு அவனுக்குத் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் அந்தத் தாய் எடுக்கும் இந்த முயற்சி பார்ப்பவர் கண்களைக் குளமாக்குகிறது.

​தந்தை அருகில் இல்லையென்றாலும், அவரது ஆசீர்வாதமும் அன்பும் பரிசுகளின் வழியாகத் தொடர்வதை அந்தச் சிறுவன் உணர்கிறான். மகனின் மனதில் தந்தையின் பிம்பத்தை அழியாமல் செதுக்கும் அந்தத் தாயின் பேரன்பு குறித்த இந்தக் காணொளி, தற்போது எக்ஸ் (X) தளத்தில் பலரையும் நெகிழ வைத்து இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.