சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், சிக்னலில் ஒரு கார் நின்று கொண்டிருக்கிறது. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு பந்து உருண்டு சென்று அந்த காரின் அடியில் சிக்கிக்கொள்கிறது. அந்தப் பந்தைத் துரத்திக் கொண்டு வந்த நபர், காரைச் சுற்றிச் சென்று பந்தை எடுப்பதற்குப் பதிலாக, ஆபத்தை உணராமல் காருக்கு அடியில் நுழைந்து அதை எடுக்க முயற்சி செய்கிறார். துரதிர்ஷ்டவசமாக அதே நேரத்தில் சிக்னல் விழுந்ததால் கார் நகரத் தொடங்குகிறது.
Bro, I’m convinced some people are just born without brains pic.twitter.com/Sgs9pYne3J
— FightBell🔔 (@FightBell) January 4, 2026
இதில் காரின் டயர் அந்த நபரின் மீது ஏறி விடுகிறது. இந்தக் கொடூரமான விபத்தைக் கண்ட அருகில் இருந்த பெண் ஒருவர், பதறியடித்து ஓடி வந்து காரை நிறுத்தச் சொல்கிறார். அவரின் துரிதமான செயலால் கார் உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்னர் அந்தப் பெண் காரின் அடியில் சிக்கியிருந்த நபரை பத்திரமாக வெளியே வர உதவி செய்கிறார்.
