சிங்கப்பூரில் 46 வயது பெண் ஒருவர் தனது 9 வயது மகளுடன் டாடா கால் டாக்ஸி நிறுவனத்தின் காரில் பயணித்துள்ளார். அப்போது குறிப்பிட்ட இடத்தில் நிப்பாட்டுவதில் பயணிக்கும் கார் ஓட்டுனருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்தப் பெண் ஓட்டுநர் பேசுவதை காணொளியாக பதிவு செய்துள்ளார்.

சீனாவை சேர்ந்த ஓட்டுநரான ஹூவா நீங்கள் இந்தியாவை சேர்ந்தவர் நான் சீனாவை சேர்ந்தவர் இந்தியர் நீங்கள் ரொம்பவும் மோசம் என தரகுறைவாக பேசி உள்ளார். ஆனால் உண்மையில் அந்தப் பெண் சிங்கப்பூர் யுரேஷியா வம்சாவளியை சேர்ந்தவர் தான் இருந்தாலும் இந்த காணொளி வைரலான நிலையில் கால் டாக்ஸி நிறுவனம் அவரை பணி நீக்கம் செய்துள்ளது. அதோடு இந்த சம்பவத்தில் அவருக்கு 3000 சிங்கப்பூர் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.187624) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.