இங்கிலாந்தின் லாவ்பாரோ பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு பயின்று வந்த இந்திய மாணவர் ஜி எஸ் பாட்டியா கடந்த 15 ஆம் தேதியிலிருந்து மாயமாகியுள்ளார். இதனை பாஜகவின் மூத்த தலைவரான மன்ஜிந்தர் சிங் சிர்சா மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

இந்திய மாணவரின் அடையாளச் சான்றுகளை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டதோடு அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தூதராகமும் பல்கலைக்கழகமும் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில் இங்கிலாந்தின் கிழக்கு லண்டன் பகுதியில் அமைந்திருந்த ஏரியில் மாணவர் ஜி எஸ் பாட்டியாவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது இறப்புக்கான காரணம் குறித்து இதுவரை தெரியாத நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.