
நடிகர் பிரகாஷ்ராஜ் அவ்வப்போது பிரதமர் மோடியை விமர்சித்து வருகிறார். இந்நிலையில் ஈரோடு பண்ணாரி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வந்திருந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், பிரகாஷ் ராஜ் மோடியை தொடர்ந்து விமர்சித்து வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதமர் குறித்து கண்மூடித்தனமாக விமர்சனத்தை பிரகாஷ் ராஜ் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என எச்சரித்தார்.