மகாராஷ்டிர மாநிலம் நாந்தேடு பகுதியில் பசு மாடு ஒன்று தனது கன்றைக் காப்பாற்ற இறுதிவரை போராடிய இதயத்தை உருக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாட்டுத் திருடர்கள் சிலர் அந்தப் பசுவின் கன்றை வலுக்கட்டாயமாகப் பிடித்துச் செல்ல முயன்றபோது, அந்தத் தாய் பசு தனது முழு பலத்தையும் திரட்டி அவர்களைத் தடுத்துப் போராடியுள்ளது. இருப்பினும், இரக்கமற்ற அந்தத் திருடர்கள் கன்றைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றனர்.
வாயில்லா ஜீவனான அந்தத் தாய் பசு, தனது கன்று பிரிக்கப்பட்டதை உணர்ந்து கதறிய காட்சி பார்ப்பவர் எவரையும் கலங்கச் செய்வதாக அமைந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து உள்ளூர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கன்றைத் திருடிச் சென்ற நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
The mother cow fought till the very last moment to save her calf… but cow smugglers took calf away!
The video from Nanded, Maharashtra, brought tears to everyone's eyes…. strong demand against cow smugglers…
Police are investigating the case.. pic.twitter.com/NFUaiNWJm1
— Megh Updates 🚨™ (@MeghUpdates) January 31, 2026
தற்போது அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோ பதிவுகளின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு தாயின் போராட்டத்தை மதிக்காமல் இத்தகைய செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவில் கைது செய்து, அந்தத் தாய் பசுவிடம் கன்றை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
