நெடுஞ்சாலையின் நடுவே அமர்ந்து ஒரு குடும்பம் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த அலட்சியமான செயல், சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது. அந்த வழியாக வந்த கார் ஓட்டுநர் ஒருவர், ஆபத்தான முறையில் சாலையில் அமர்ந்திருந்த அவர்களைப் பார்த்து “இது என்ன காரியம்?” என்று கோபமாகக் கேட்டுள்ளார்.
அதற்குச் சிறிதும் குற்ற உணர்வு இல்லாமல் அந்த குடும்பத்தினர், “நாங்கள் சாலையில் அமர்ந்திருப்பதை உங்களால் பார்க்க முடியவில்லையா?” என்று எகத்தாளமாகப் பதிலளித்துள்ளனர். ஓட்டுநர் மீண்டும் “அப்படியானால் நாங்கள் சாலையில் வண்டியே ஓட்டக் கூடாதா?” என்று கேட்டதற்கு, “இது மிகப்பெரிய சாலை, நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்வோம்” என்று பொறுப்பற்ற முறையில் வாதிட்டுள்ளனர்.
SHOCKER 🚨 A family was clicking photos in the middle of a highway.
ANGRY DRIVER: What is this ?
FAMILY: Can’t you see? We are sitting on the road 😳
DRIVER: So we should not drive on the road now?
FAMILY: We can do anything. It's such a big road 🤯pic.twitter.com/q9jLsFZDOP
— News Algebra (@NewsAlgebraIND) January 31, 2026
அதிவேகமாக வாகனங்கள் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் இது போன்ற புகைப்படங்கள் எடுப்பது தற்கொலைக்குச் சமமான செயலாகும். சாலை என்பது பொதுச் சொத்து என்றும், அதில் மற்றவர்களின் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதோ அல்லது தங்களின் உயிரைப் பணயம் வைப்பதோ சட்டப்படி குற்றமாகும்.
