ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், இந்தியாவில் நாம் சாதாரணமாகக் கருதும் பல அன்றாட விஷயங்கள் வெளிநாடுகளில் எவ்வளவு ஆடம்பரமானதாக மாறுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் விவாதம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். உணவு டெலிவரி, மளிகை பொருட்கள், மருந்துகள் என அனைத்தையும் வீட்டிற்கே வரவழைப்பது இந்தியாவில் எளிதாக உள்ளது.
ஆனால், இங்கிலாந்தில் இதுபோன்ற சேவைகள் பெரும்பாலும் கிடைக்கப்பெறுவதில்லை அல்லது மிக அதிக செலவு பிடிக்கக்கூடியதாக உள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய வீடுகளில் சாதாரணமாக இருக்கும் வீட்டு வேலை ஆட்கள், எளிதில் கிடைக்கக்கூடிய பழுதுபார்ப்பு சேவைகள் மற்றும் கடைசி நிமிட அவசரத் தேவைகளைச் சமாளிக்கும் வசதி போன்றவை வெளிநாடுகளில் மிகவும் கடினமானவை என்றும் அவர் விளக்கியுள்ளார்.
View this post on Instagram
“>
மேலும் இந்தியாவில் பழுதுபார்க்கும் கலாச்சாரம் மேலோங்கி இருக்கும் நிலையில், இங்கிலாந்தில் பொருட்களைத் திருத்துவதை விடப் புதியதாக வாங்குவதே வழக்கமாக உள்ளது. இந்தியாவில் நாம் பெரிதாகக் கருதாத இந்தச் சிறிய வசதிகள், உண்மையில் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதை வெளிநாடு சென்ற பிறகே பலரும் உணர்கிறார்கள் என்பது நிதர்சனம்.
