பெங்களூரு மாநகராட்சியில் உள்ள 10 லட்சத்தில் துருப்பிடிக்காத எக்கு  கம்பிகளை கொண்டு உருவாக்கப்பட்ட நிழற்குடை ஒன்று ஒரே வாரத்தில் திருடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் வினோதம் என்னவென்றால் பெங்களூர் மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு பின்பக்கத்திலும், கர்நாடக பேரவை கட்டடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர்  குறைவான தூரத்தில் தான் இந்த பேருந்து நிழற்குடையானது அமைந்துள்ளதாம்.

இந்த  நிழற்குடையை பார்ப்பதற்காக ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்ற போது அது அங்கு இல்லையாம். இது குறித்து பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார்களாம். இதை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மிகவும் பரபரப்பான எப்பொழுதும் கூட்டமாக  இருக்கும்  ஒரு சாலையிலேயே பேருந்து  நிழற்குடையை களவாடி சென்றிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.. இதனை எடுத்து இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.