தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிவடைந்ததிலிருந்து அதிமுகவில் உட்க்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளது. இபிஎஸ் தலைமையில் ஒரு அணி மற்றும் சிவி சண்முகம் தலைமையில் ஒரு அணி என இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எஸ்.பி வேலுமணி அணி ஆதரவு கொடுத்தது. இந்த நிலையில் கொறடா விவகாரம் தொடர்பாக சபாநாயகரிடம் இருதரப்பும் மனு கொடுத்துள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் இடம் பெறவில்லை. இதன் காரணமாக தற்போது மீண்டும் இபிஎஸ் தலைமையிலான அணிக்கு சில எம்எல்ஏக்கள் மாறிவரும் நிலையில் எஸ்.பி வேலுமணி தலைமையில் உள்ள எம்எல்ஏக்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் அதிமுக எம்எல்ஏக்களான மரகதம், சத்தியபாமா மற்றும் ஜெயக்குமார்  ஆகிய மூவரும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளனர். பதவியேற்ற 21 நாளில் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்த நிலையில் அவர் உடனடியாக ராஜினாமாவை ஏற்க தலைமைச் செயலகத்தில் வைத்து அமைச்சர் ஆதவ் முன்னிலையில் மூவரும் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தனர். இதற்கு அதிமுக தலைவர்கள் பலரும் கட்டணம் தெரிவித்து வரும் நிலையில் தற்போதைய எம்பி இன்ப துரை கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மூவரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்பதாக அறிவிக்கும் முன்னரே அவர்கள் மூவரும் அவசர அவசரமாக தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுணாவை சென்று சந்திப்பதும், எக்ஸ்பிரஸ் வேகத்தில் அவர்களை கட்சியில் இணைத்து கொண்டு மின்னல் வேகத்தில் அவர்களுக்கு தவெக உறுப்பினர் அடையாள அட்டையை வழங்குவதும் திட்டமிடப்பட்டவை.இது 100 சதவீத குதிரை பேரம் என்று பதிவிட்டுள்ளார்.