தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிவடைந்ததிலிருந்து அதிமுகவில் உட்க்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளது. இபிஎஸ் தலைமையில் ஒரு அணி மற்றும் சிவி சண்முகம் தலைமையில் ஒரு அணி என இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எஸ்.பி வேலுமணி அணி ஆதரவு கொடுத்தது. இந்த நிலையில் கொறடா விவகாரம் தொடர்பாக சபாநாயகரிடம் இருதரப்பும் மனு கொடுத்துள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் இடம் பெறவில்லை. இதன் காரணமாக தற்போது மீண்டும் இபிஎஸ் தலைமையிலான அணிக்கு சில எம்எல்ஏக்கள் மாறிவரும் நிலையில் எஸ்.பி வேலுமணி தலைமையில் உள்ள எம்எல்ஏக்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் அதிமுக எம்எல்ஏக்களான மரகதம், சத்தியபாமா மற்றும் ஜெயக்குமார்  ஆகிய மூவரும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளனர். பதவியேற்ற 21 நாளில் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்த நிலையில் அவர் உடனடியாக ராஜினாமாவை ஏற்க தலைமைச் செயலகத்தில் வைத்து அமைச்சர் ஆதவ் முன்னிலையில் மூவரும் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தனர். இதற்கு அதிமுக தலைவர்கள் பலரும் கட்டணம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது அதிமுக மூத்த தலைவர் ராஜேந்திர பாலாஜியும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது, பதவி ஏற்ற 21 நாளில் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து வேறு கட்சிக்கு மாறுவது தமிழக அரசியலில் இதுவரை இல்லாத ஒன்று. மேலும் இது குதிரை பேரம் அல்ல யானை பேரம் என்று பதிவிட்டுள்ளார்.