பள்ளிக்கூடம் என்பது பிள்ளைகள் கல்வி கற்கும் இடம், ஆனால் அங்கே ஒரு தலைமை ஆசிரியை செய்துள்ள காரியம் ஒட்டுமொத்த கல்வித்துறையையே தலைகுனிய வைத்துள்ளது. மது குமாரி என்ற அந்தத் தலைமை ஆசிரியை, பள்ளி நேரத்தில் மாணவிகளைத் தனக்கு மசாஜ் செய்யச் சொல்லி உத்தரவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் தீயாய்ப் பரவி வரும் அந்த வீடியோவில், மாணவிகள் சிலர் அந்த ஆசிரியைக்குக் கைகளாலும், கால்களாலும் மசாஜ் செய்கின்றனர். இதில் கொடுமையின் உச்சமாக, ஒரு மாணவி சப்பாத்தி கட்டையை (Belan) வைத்து ஆசிரியைக்கு மசாஜ் செய்யும் காட்சி பார்ப்பவர்களை அதிர வைத்துள்ளது.

​மாணவிகள் கஷ்டப்பட்டு மசாஜ் செய்துகொண்டிருக்கும்போது, அந்த ஆசிரியை எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஜாலியாகத் தனது மொபைல் போனை நோண்டிக்கொண்டிருக்கிறார். இந்த வீடியோ வெளியானதும் இணையவாசிகள் கொந்தளித்துப் போய்விட்டனர். “பிள்ளைகளின் எதிர்காலத்தை உருவாக்க வேண்டிய இடத்திலா இப்படிப்பட்ட அசிங்கம் நடப்பது?” எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த ஆசிரியை மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.