உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள வஜிர்பூர் பகுதியில் இன்று அதிகாலை 7:40 மணியளவில் நடந்த விபத்து, பார்ப்பவர்களின் ரத்தத்தை உறைய வைத்துள்ளது. பாரம் ஏற்றப்பட்ட ஒரு டிராக்டர் அந்தச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பார்க்காத விதமாகத் தார்ச் சாலை திடீரென உள்வாங்கிப் பிளந்தது. இதனால் டிராக்டரின் பின்னால் இருந்த டிராலி பள்ளத்திற்குள் சிக்கிக்கொள்ள, அந்த வேகத்தில் டிராக்டரின் முன்பகுதி அப்படியே அந்தரத்தில் தூக்கியது. அப்போது டிராக்டரில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் நிலைதடுமாறி கீழே விழ, அவர் சரியாக டிராக்டர் சக்கரங்களுக்கு நடுவிலேயே விழுந்தார்.

​அதிர்ஷ்டவசமாக அந்த டிராலி பள்ளத்தில் சிக்கியதால், டிராக்டர் மேலே ஏறாமல் அப்படியே நின்றது. ஒருவேளை டிராக்டர் ஒரு இன்ச் நகர்ந்திருந்தால் கூட, அந்த நபரின் தலை நசுங்கிப் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். கீழே விழுந்த நபர் சில வினாடிகளில் எழுந்து வந்து, தனது தலையைப் பிடித்துக்கொண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்ற காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகவே, “இவ்வளவு மோசமான தரத்திலா ரோடு போடுவீர்கள்?” என உள்ளூர் அதிகாரிகளை மக்கள் சரமாரியாகக் கேள்வி கேட்டு வருகின்றனர்.