தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரும் நடிகருமான விஜய், திருச்சி பிரச்சாரத்திற்காக சென்றபோது, ஒரு தொண்டர் அவருக்கு கூலிங் கிளாஸ் ஒன்றை அளித்தார். விஜய் அதை ஏற்றுக்கொண்டு அணிந்துவிட்டு, “இப்போ ஓகேவா?” என்று கேட்ட காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதைப் பயன்படுத்தி, சிலர் ‘கொடி’ படத்தில் த்ரிஷா, தனுஷுக்கு கூலிங் கிளாஸ் அணிய சொல்லும் காட்சியை எடிட்ட் செய்து, அது விஜய்க்கு சொல்வது போலவும், விஜய் கண்ணாடி அணிந்துவிட்டு “ஓகேவா?” என்று கேட்பது போலவும் ஒரு வைரல் வீடியோ உருவாக்கினர்.

View this post on Instagram

A post shared by @sannthoshhhh

இந்த எடிட்டிங், விஜய்-த்ரிஷாவின் பழைய ‘கில்லி’ படத்தை நினைவூட்டி, ரசிகர்களிடையே பெரும் சிரிப்பையும் பகிர்வுகளையும் ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி, “இப்படி கிரியேட்டிவ் எடிட்டிங் வேலை யாரு பண்ணாரு?” என்ற கேள்வியை நெட்டிசன்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. சிலர் இது போன்ற எடிட்டிங்களை தவிர்க்க வேண்டும் என்றும் விவாதித்து வருகின்றனர்.