சிவகாசியில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் என்ற பெயரில் வெளியாகும் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுக நடத்தும் நாடகம் என்று விமர்சித்தார்.
இதுபோன்ற பொய்ப் பிரச்சாரங்கள் மக்களிடம் எடுபடாது என்றும், 2026 சட்டமன்றத் தேர்தல் அதிமுகவிற்கான வெற்றிக் ஆண்டாக அமையும் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளதே அதிமுகவின் 100 சதவீத வளர்ச்சிக்குச் சான்று என அவர் பெருமிதம் கொண்டார்.
மேலும், பூத் கமிட்டி கட்டமைப்பு கூட இல்லாத சிலர் அரசியலில் சித்து விளையாட்டுகளைக் காட்டி வருவதாகவும், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த அவர்களுக்குப் பலம் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்.
திரைத்துறை பிரபலங்களைக் காணக் கூட்டம் கூடுவதெல்லாம் வாக்குகளாக மாறாது என்று குறிப்பிட்ட அவர், தேர்தல் களம் என்பது எப்போதும் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையேதான் இருக்கும் என்றார்.
வரவிருக்கும் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
