தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் பல்வேறு பிரச்சார யுக்திகளை பயன்படுத்தி வருகின்றன.

அதன்படி திமுகவினரின் போஸ்டர் பிரசாரம் பேசு பொருளாக மாறி உள்ளது. திருப்பூரின் பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜி pay என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் scan செய்யுங்கள் scam பாருங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதை ஸ்கேன் செய்தால் பாஜகவின் ஊழல் என்ற பெயரில் வீடியோ ஒளிபரப்பப்படுகிறது.