மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் இடையிலான வார்த்தைப் போர் புதிய இராஜதந்திர மோதலை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் இணைய மறுத்த பிரான்ஸை விமர்சித்த டிரம்ப், மக்ரோனின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது மனைவி பிரிஜிட் மக்ரோன் குறித்துக் கேலி செய்துள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்வில் பேசிய டிரம்ப், 2025-ல் மக்ரோனும் அவரது மனைவியும் விமானத்திலிருந்து இறங்கும்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது போன்ற பழைய வீடியோவைச் சுட்டிக்காட்டி, “மக்ரோனின் மனைவி அவரை மிகவும் மோசமாக நடத்துகிறார்; அவர் இன்னும் தனது தாடையில் விழுந்த அடியிலிருந்து மீண்டு வருகிறார்” என்று கிண்டலாகப் பேசினார்.
🚨🇫🇷🇺🇸 Trump said Macron’s wife beats him up.
Macron’s response: “Trump talks too much… his remarks are neither elegant nor up to the standard.”
Macron told Trump that he has bad manners.
In French this is a declaration of war.pic.twitter.com/fhcm2lyGKt https://t.co/8Nfx8Llqdo
— Mario Nawfal (@MarioNawfal) April 2, 2026
“>
டிரம்பின் இந்தப் பேச்சுக்குத் தற்போது தென்கொரியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்ரோன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “டிரம்பின் வார்த்தைகள் கண்ணியமானவையோ அல்லது ஒரு ஜனாதிபதிக்குத் தகுந்த தரம் கொண்டவையோ அல்ல. உலகமே போரினாலும், உயிரிழப்புகளாலும் தவித்துக் கொண்டிருக்கும்போது இது ஒன்றும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி (Show) அல்ல” என்று மக்ரோன் சாடியுள்ளார்.
🚨🇺🇸🇫🇷 Trump just mocked Macron by saying his wife “treats him extremely badly” and he’s “still recovering from the right to the jaw.”
Brigitte Macron is 71. Emmanuel Macron is 48. They have been married since 2007.pic.twitter.com/UhSatPDagD https://t.co/3U34eEvDb5
— Mario Nawfal (@MarioNawfal) April 2, 2026
“>
மேலும், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க அமெரிக்காவிற்கு உதவத் தங்களது போர்க்கப்பல்களை அனுப்பப் பிரான்ஸ் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் அவர் உறுதிப்படுத்தினார். ஈரானுடன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மக்ரோன் வலியுறுத்தி வரும் நிலையில், டிரம்பின் இத்தகைய தனிப்பட்ட தாக்குதல்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
