சமூக வலைதளங்களில் தினமும் விதவிதமான வீடியோக்கள் வெளியாகி நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. அந்த வகையில் தற்போது இளைஞர் ஒருவரின் ‘அலப்பறை’ வீடியோ இணையத்தை அதிரவைத்துக் கொண்டிருக்கிறது.

அந்த இளைஞர் தனது உடல் முழுவதும் துணிகளுக்குப் பதிலாக வாழை இலைகளைக் கட்டிக்கொண்டு, கைகளில் இறக்கைகள் போல பெரிய இலைகளை மாட்டிக்கொண்டு  சிறகடித்துப் பறக்கும் பறவை நான் என்ற பாடலுக்கு விசித்திரமான நடனமாடுகிறார்.

தலையிலும் முதுகிலும் செடி மற்றும் கிளைகளைக் கட்டிக்கொண்டு அவர் ஆடும் அந்த ‘பறவை நடனம்’ பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது.

வாழை இலையில் இவ்வளவு பெரிய ஃபேஷன் டிசைனா என நெட்டிசன்கள் இந்த வீடியோவை ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவை பார்த்தவர்கள், “இவர் என்ன ரகமான பறவை? மொராவா அல்லது காகமா?” என்றும், “உர்ஃபி ஜாவேத்தின் சகோதரர் போல இருக்கிறார்” என்றும் ஜாலியாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Avdhesh Kushwaha (@dialog_superstar_28)

“>

அந்த இளைஞரின் அசாத்தியமான தன்னம்பிக்கையும், அவர் பறவை போலவே குதித்துக் குதித்து ஆடும் விதமும் இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் ரசிக்கக் காரணமாகியுள்ளது.