ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம்  ஜாதியா என்ற  கிராமத்தில் திருட்டும், அதனைத் தொடர்ந்து நடந்த  சம்பவமும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை 10ம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில், ராதா கிருஷ்ணா காலனியில் உள்ள 5 வீடுகளின் பூட்டுகளை உடைத்து, ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் சுமார் ரூ.7-8 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்ம திருடர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். ஆனால் அதையடுத்து நடந்த செயல்தான் அனைவரையும்  வியப்புக்கு உள்ளாக்கியுள்ளது. திருடர்களே பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தைகளை அழைத்து, ஒவ்வொருவருக்கும் ₹500 நோட்டுகளை வழங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் முழுவதும் அந்த பகுதியில்  உள்ள சிசிடிவி கேமராக்களில் தெளிவாக பதிவாகியுள்ளது. இதில் திருடர்கள் எவ்வித முகமூடி அணியாமல், துணிச்சலுடன்  வீதிகளில் சுற்றி, வீட்டிற்கு வருகிற குழந்தைகளை அழைத்து பணம் கொடுப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்த வகையான செயல்பாடுகள், சாதாரண திருடர்களின் செயல் அல்ல என்றும், இது ஒரு திட்டமிட்ட கொள்ளை எனவே சந்தேகிக்கப்படுகிறது.

“>

 

சம்பவம் குறித்து தகவலறிந்த  போலீசார், சம்பந்தப்பட்ட வீடுகளிலிருந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.  “திருடர்கள் இதுவரை பிடிபடவில்லை. அவர்கள் முகம் தெளிவாக காணப்படும் சிசிடிவி காட்சிகள் முக்கிய விசாரணைக்குரியது. விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம்” என உறுதியளித்தார்.