துருக்கியைச் சேர்ந்த ஒரு ஆசிரியர், வகுப்பறைப் பலகையில் இருந்த துருக்கி நாட்டுத் தேசியக் கொடியைத் தெரிந்தே தலைகீழாக மாற்றி வைத்தார். தனது மாணவர்கள் நாட்டின் சின்னமான கொடி தவறாக இருப்பதை கவனிக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவே அவர் இப்படிச் செய்தார்.
கொடி தவறாக இருப்பதைப் பார்த்த மாணவர்கள், ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் உடனே அதைச் சரிசெய்து சரியான முறையில் பொருத்தினார்கள். மாணவர்களின் இந்த நாட்டுப்பற்றையும், விழிப்புணர்வையும் பார்த்த ஆசிரியர் நெகிழ்ந்து போனார்.
Öğretmen panoda bulunan Türk bayrağını bilerek hatalı yerleştirdi…
Öğrencilerin fark edip etmeyeceğini izledi, sonrası ise dikkat çekti. pic.twitter.com/hdcsDkzFHd
— 23 DERECE (@yirmiucderece) April 16, 2026
“>
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, அந்த மாணவர்களின் பொறுப்புணர்வுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
