நேரம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பதற்கு உதாரணமாக, ஜப்பான் நாட்டு அமைச்சர் ஒருவர் செய்த செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜப்பானின் பொருளாதார பாதுகாப்புத்துறை அமைச்சரான அகியோ ஒனோடா, ஒரு முக்கியமான அமைச்சரவைக் கூட்டத்திற்கு போக்குவரத்து நெரிசல் காரணமாக வெறும் ஐந்து நிமிடம் தாமதமாக வந்துள்ளார்.
இதற்காக அவர் பதற்றத்துடன் பிரதமர் அலுவலகத்தின் தாழ்வாரத்தில் ஓடி வரும் காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளன. ஜப்பான் போன்ற நேரத்தை மிகவும் மதிக்கும் நாட்டில், ஐந்து நிமிடம் என்பது மிகப்பெரிய தாமதமாகக் கருதப்படுவதால், அவர் தனது மேலதிகாரிகள் மற்றும் நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
வழியில் ஏற்பட்ட ஒரு விபத்தினால் போக்குவரத்து ஸ்தம்பித்ததே இந்தத் தாமதத்திற்கு காரணம் என்று விளக்கிய அவர், எதிர்காலத்தில் இதுபோன்ற சூழல்களைச் சமாளிக்க இன்னும் முன்கூட்டியே திட்டமிடுவேன் என்று உறுதியளித்துள்ளார்.
இந்தியாவில் அமைச்சர்களுக்காகவும் விருந்தினர்களுக்காகவும் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் நிலவும் நிலையில், வெறும் 5 நிமிடத்திற்காக ஓடி வந்து மன்னிப்பு கேட்ட ஜப்பானிய அமைச்சரின் பொறுப்புணர்வை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram
“>
“நேரத்தின் மதிப்பை அறிந்தவர்களால் மட்டுமே இப்படிச் செய்ய முடியும்” என்று இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
