இந்தியாவில் பண்டிகைக் காலங்களில் சாலை ஓரங்களில் வியாபாரம் செய்வது வழக்கம். அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சாலையோரம் கிறிஸ்துமஸ் தொப்பிகளை விற்றுக் கொண்டிருந்த ஒரு ஏழை வியாபாரியை, காரில் வந்த நபர் ஒருவர் கடுமையாக மிரட்டியுள்ளார். “பாரதத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடவோ, அது தொடர்பான பொருட்களை விற்கவோ அனுமதி கிடையாது; இது இந்து ராஷ்டிரா” என்று கூறி அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மிரட்டலுக்கு ஆளான அந்த ஏழை வியாபாரி செய்வதறியாது திகைத்து நிற்கும் காட்சிகள் பார்ப்போரை வேதனை அடையச் செய்துள்ளன.
A Sanghi threatens a poor vendor selling Christmas cap
The Coward Sanghi goes on to say "You can't sell a Christmas cap and celebrate Christmas in India, this is Hindu Rashtra"
How is this different from Bangladesh. pic.twitter.com/wCpWynpWEF
— Nehr_who? (@Nher_who) December 22, 2025
இந்த வீடியோ எக்ஸ் (X) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, பலரும் அந்த நபரின் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்களுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?” என்று பல நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், மதநல்லிணக்கத்திற்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் இத்தகைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
