தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்த ஜோதிடர் ஒருவரின் கணிப்பு தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், “இப்போது விஜய்க்கு வயது 51, இதனுடன் ஒரு 50 ஆண்டுகள் சேர்த்தால் 101 வயது வரை இருப்பார். அதன்பின் 50 ஆண்டுகள் பிரதமராக நீடித்து 151 வயதை எட்டுவார், தொடர்ந்து 50 ஆண்டுகள் உலகத் தலைவராக (World Leader) இருந்து 201 வயது வரை வாழ்வார்” என்று ஜோதிடர் கணக்குப்போட்டு கூறியுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், “இது என்ன அரசியல் கணிப்பா? இல்லை அமரராக வாழும் ‘இம்மார்டாலிட்டி’ (Immortality) திரைக்கதையா?” என்று கலாய்த்து மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து இப்படி ஒரு அதிரடியான கணிப்பை வெளியிட்டவர் சாதாரண ஆள் இல்லை என்பதால் இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது. ஏனெனில், இவர்தான் ஏற்கனவே  அதிகாரப்பூர்வ அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டு, பின்னர் நீக்கப்பட்டு பல்வேறு விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.<

/p>