தேர்தலில் படுதோல்வி அடைந்த பிறகும், திமுக இன்னும் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் அடம் பிடித்து வருவதாக அமைச்சர் அருண்ராஜ் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், அண்மையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (MLA) அமைச்சர் பதவி வழங்குவது குறித்து, தமிழக முதல்வர் தான் இறுதி முடிவை எடுப்பார் என்றும் அவர் ஓப்பனாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை தடையின்றிப் பெறுவதற்காக, மத்திய அரசுடன் எப்போதும் இணக்கமான போக்கையே கடைப்பிடிப்போம் என்றும் உறுதியளித்துள்ளார். தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம், தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி விவாதத்தைக் கிளப்பி வருகிறது.
