நடந்து முடிந்த தேர்தலில் திமுக சந்தித்த பலத்த தோல்வி குறித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தத் தோல்விக்கான உண்மையான காரணங்கள் மற்றும் பின்னணிகளைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்புக் கள ஆய்வு குழுவுடன், ஸ்டாலின் மிகத் தீவிரமாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

​திமுக-வின் இந்தத் தோல்வி குறித்து அடிமட்ட அளவில் ஆராய்வதற்காக 36 பேர் கொண்ட பிரம்மாண்ட குழுவை கட்சித் தலைமை தற்போது நியமித்துள்ளது. இக்குழுவினர் நாளை மறுநாள் முதல் நேரடியாகத் தொகுதி வாரியாகக் களம் இறங்கி, தோல்விக்கான காரணங்களை அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய உள்ளனர். தமிழக அரசியலில் திமுக-வின் இந்தத் திடீர் அதிரடி மூவ் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.