தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுத்து நிறுத்த, தமிழ்நாடு அரசு தற்போது அதிரடியான புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் ஆணையர், அனைத்துத் துணை மற்றும் உதவி ஆணையர்களுக்கும் அவசரச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். கல்வி நிறுவனங்களைச் சுற்றி நடக்கும் போதைப்பொருள் புழக்கத்தைக் கண்டறிந்து, அதை முற்றிலுமாக ஒழிக்கத் தனிப் படை அமைத்து, ரகசிய நெட்வொர்க் மூலம் கண்காணிக்க வேண்டும் என்று அதில் அதிரடியாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

​அதேபோல், மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் அதற்கு இணையாகச் செயல்படும் பார்களில் (Bars) அதிகாரிகள் எந்த நேரத்திலும் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த உத்தரவில் மிகக் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இளைய சமுதாயத்தைச் சீரழிக்கும் போதை ஆசாமிகள் மற்றும் கடத்தல் கும்பலுக்கு எதிராகத் தமிழக அரசு எடுத்துள்ள இந்த விஸ்வரூப ஆக்ஷன், தற்போது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.