அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் மிடில்டவுனில் உள்ள ‘Mr. Croissant’ பேக்கரி கடையை நேரில் சென்று பார்வையிட்ட மாநில ஆளுநர் கேத்தி ஹோக்குல், அக்கடையின் இந்தியர் உரிமையாளர் ரகேஷ் நாயக்கை நேரில் சந்தித்து பாராட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த கடையின் தலைமையாசிரியராகவும் சேஃப்பாகவும் செயல்பட்டு வரும் ரகேஷ் நாயக் கடந்த 21 ஆண்டுகளாக பேக்கரி மற்றும் பாஸ்ட்ரி துறையில் பணியாற்றி வருகிறார். லண்டன், பாரிஸ், சிங்கப்பூர் போன்ற உலகநிலையிலும் அனுபவம் பெற்ற இவர், தற்போது அமெரிக்காவில் தனது கனவுகளை நனவாக்கி வருகிறார்.
View this post on Instagram
“>
வீடியோவில் ஆளுநர் கேத்தி ஹோக்குல், “இதெல்லாம் அருமை… உங்களுக்கான மூலோபாயம் என்ன?” எனக் கேட்டதற்கு, ரகேஷ் நாயக், “நான் 21 வருட அனுபவமுள்ளவன். உலகின் சிறந்த Baking Institution-களில் பணியாற்றியிருக்கிறேன்.
Middle Town வளர்ச்சியடைந்த இடம் என்பதால், என் கனவான Mr. Croissant கடையை இங்கேத் தொடங்கினேன்,” என கூறுகிறார். இந்த வீடியோவில் அவரது தொழில் முனைவு, நம்பிக்கை மற்றும் பாரம்பரிய உணவுகளுக்கு இடம் அளிக்கும் அணுகுமுறை தெளிவாக தெரிகிறது.
இந்நிலையில் நியூயார்க் ஆளுநர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ரகேஷ் நாயக் நம் நாட்டுக்கு வந்து சிறந்த வாழ்க்கை உருவாக்கியவர். சமூக வளர்ச்சிக்கு அர்ப்பணித்தவர். இதுவே உண்மையான அமெரிக்க கனவு. மிடில்டவுனுக்கு வரும்போது Mr. Croissant-ஐ தவறாமல் பார்வையிடுங்கள்” என பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ அமெரிக்காவில் இடம்பெற்று வரும் குடியேற்ற விவகாரங்களுக்கு மத்தியில் நேசம், நம்பிக்கை, வாய்ப்பு என்ற உணர்வுகளை முன்னிலைப்படுத்தி சமூக வலைதளங்களில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
