சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் இழப்புகள் மிகப் பெரியவை. இதனை மறப்பது யாராலும் முடியாது. இந்த இயற்கைப் பேரிடர்களிலிருந்து தற்காத்துக்கொள்ள ஜப்பான் பல முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி, தற்போது வைரலாகி வருகிறது. இந்தக் காணொளி ஜப்பானின் பாதுகாப்பு முயற்சிகளைப் பற்றி மக்களுக்கு எளிதாகப் புரிய வைக்கிறது.
அவ்வகையில் ஜப்பான் 246 மைல் தொலைவுக்கு மிக உயரமான சுனாமி சுவர்களைக் கட்டியுள்ளது. இந்தச் சுவர்கள் சுனாமியின் பாதிப்புகளைத் தடுக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதோடு, ஜப்பான் இயற்கைப் பேரிடர்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக 9 மில்லியன் மரங்களை நட்டுள்ளது. இந்த மரங்கள் காற்று மற்றும் நீரின் வேகத்தைக் குறைத்து, மண்ணரிப்பு மற்றும் வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்க உதவுகின்றன. இந்த முயற்சிகள் ஜப்பானின் இயற்கைப் பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்தக் காணொளி மூலம் ஜப்பானின் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் உலக அளவில் பேசப்படுகின்றன.
