ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் ஐசிசி இளையோர் (யு-19) உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில், வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மழையினால் பாதிக்கப்பட்ட இப்போட்டியில், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 29 ஓவர்களில் 165 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணி, ஒரு கட்டத்தில் 21 ஓவர்களில் 106 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.
View this post on Instagram
“>
அப்போது லாங்-ஆஃப் எல்லைக்கோட்டில் பீல்டிங் செய்து கொண்டிருந்த வைபவ் சூர்யவன்ஷி, வங்கதேச வீரர் சம்யுன் பஷீர் அடித்த பந்தை அந்த காற்றில் எகிறிப் பிடித்தார். எல்லைக்கோட்டைத் தாண்டும் தருவாயில் பந்தை லாவகமாக உள்ளே தூக்கிப்போட்டு, மீண்டும் மைதானத்திற்குள் வந்து அவர் பிடித்த விதம், 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க கேட்சை ரசிகர்களுக்கு நினைவூட்டியது.
View this post on Instagram
“>
இந்த அபாரமான கேட்ச் ஆட்டத்தின் போக்கை மாற்றிய நிலையில், இந்தியா வெற்றியைத் தன்வசமாக்கியது. பீல்டிங்கில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி, கடினமான சூழலில் 67 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 72 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.
567 நாட்களுக்கு முன்பு சூர்யகுமார் யாதவ் நிகழ்த்திய மேஜிக்கை இளையோர் உலகக்கோப்பையில் வைபவ் மீட்டுருவாக்கம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது மகனின் இந்தச் சாதனையை வைபவ்வின் தந்தை மற்றும் சகோதரர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியாவின் இந்த வெற்றியின் மூலம் இளையோர் உலகக்கோப்பையில் தனது ஆதிக்கத்தை இந்திய அணி தொடர்ந்து நிலைநாட்டி வருகிறது.
