வங்கதேச பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், ராஜ்ஷாஹி வாரியர்ஸ் மற்றும் சில்ஹெட் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாடா ஃபர்ஹானின் செயல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
போட்டியின் 4-ஆவது ஓவரை வங்கதேசத்தின் இளம் பந்துவீச்சாளர் ருயல் மியா வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட ஃபர்ஹான், பந்துவீச்சாளரை நேரடியாகப் பார்த்து WWE ஜாம்பவான் ஜான் சீனாவைப் போல ‘உன்னால் என்னைப் பார்க்க முடியாது’ என்ற கை சைகையைச் செய்து கிண்டல் செய்தார்.
3.2 over mark – Sahibzada Farhan mocked bangladesh’s domestic bowler Ruyel Miah.
3.3 over mark – Ruyel Miah got his wicket & gave him a humiliating send-off.
Man, this is their routin.
Eat-Sleep-Get Humiliated-Repeat😭pic.twitter.com/vEAnyTznvJ— Rajiv (@Rajiv1841) January 17, 2026
“>
இதற்கு அடுத்த பந்திலேயே ருயல் மியா ஆக்ரோஷமாகப் பந்துவீசி, ஃபர்ஹானை ‘ஷார்ட் தேர்ட் மேன்’ திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்கச் செய்தார். தான் வம்பிழுத்த பந்துவீச்சாளரிடமே அடுத்த பந்தில் விக்கெட்டைப் பறிகொடுத்து ஃபர்ஹான் வெளியேறியது பாகிஸ்தான் ரசிகர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக பாகிஸ்தான் வீரர்கள் சர்வதேச அரங்கில் இதுபோன்ற தேவையற்ற சீண்டல்களில் ஈடுபட்டுப் பின்னர் ஆட்டமிழப்பதைக் கிண்டல் செய்யும் நெட்டிசன்கள், “கிரிக்கெட்டில் அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை ஆபத்தானது” எனச் சாடி வருகின்றனர்.
