கோவை சரக காவல்துறை டிஐஜி விஜயகுமார் இன்று காலை நடைப்பயிற்சிக்கு சென்று வந்த பின்னர் துப்பாக்கியால் சுட்டு  தற்கொலை செய்து கொண்டார். இவரின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவரின் மரணத்திற்கு நடிகர் விஷால் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகர் விஷால், “இது அனைவருக்கும் மிகவும் அதிர்ச்சியான செய்தி.

அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நான் அவரை பல முறை சந்தித்துள்ளேன். அவரது கடைசி முடிவு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். டிஜஜி விஜயகுமார் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது.