தமிழகத்தில் மகள் இருக்க ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற தகுதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழக அரசு வெளியிட்டிருக்கும் தகுதிகளில் இவர்களுக்கெல்லாம் உரிமை தொகை வழங்கப்படாது. அதாவது ஆண்டுக்கு இரண்டு லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை கிடையாது.

ஐந்து ஏக்கர் நிலம் வைத்துள்ள குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கிடையாது. 21 வயது நிரம்பி இருக்கும் குடும்ப தலைவிகளுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பெண் எம் எல் ஏ, எம்பிக்கள் மற்றும் பெண் அரசு ஊழியர்களுக்கும் உரிமை தொகை கிடையாது. கார் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை கிடையாது. எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ அந்த கடையில் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே உரிமை தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.