பிரபல நடிகரான பொன்னம்பலம் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து திரையுலகில் தனக்கென நீங்கா இடம் பிடித்துள்ளார். சமீப காலமாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட பொன்னம்பலம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் யூடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் பொன்னம்பலம் கூறியதாவது, நான் சந்தோஷமா இருந்தேன். மூன்று தலைமுறைக்கு என்னென்ன அனுபவிப்பாங்களோ அதை அனுபவிச்சிட்டேன். எனக்கு கடமைகள் இருக்கு. நான் இப்படி ஆவேன் என்று எனக்கு தெரியாது. எனக்கு தொழில் சுத்தம் உண்டு.
எங்க அப்பா என்கிட்ட சொன்னது என்னன்னா, பொய் சொல்லக்கூடாது. திருடக்கூடாது. வேற என்ன வேணாலும் பண்ணலாம். கக்கூஸ் கூட கழுவலாம். கெட்ட சவகாசம் வச்சுக்க கூடாதுன்னு சொன்னாரு. சினிமாவுல எனக்கு நல்ல மரியாதை கிடைத்தது. பெயர் புகழ் கிடைத்தது. சினிமா வாழ்க்கையில் வெற்றிகளையும், அங்கீகாரத்தையும் பெற்றேன்.
இந்த உலகத்திலேயே மிகக் கொடுமையான தண்டனை டயக்னோசிஸ் பண்றது தான். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரண்டு இன்ஜெக்ஷன். ரத்தம் எல்லாம் எடுத்துருவாங்க. 750 முறை நானே ஊசி குத்தி இருக்கேன். அதுவும் ஒரே இடத்தில். எதிரிக்கும் இந்த நிலைமை வர கூடாது. உப்பு, கீர வடை, தக்காளி, உருளைக்கிழங்கு சாப்பிட கூடாதுன்னு சொல்லுவாங்க.
நல்லா சாப்பிட்டு பழகி இருக்கேன். இப்போ கிட்னி நல்லா ஆயிடுச்சு. எல்லாம் சாப்பிடலாம். அந்த ஸ்டேஜ்ல தான் இருக்கேன். ஒரு அளவுக்கு தான் சாப்பிடணும். சாவு வரும் முன் மருத்துவமனைக்கு போகக்கூடாது. நல்லது கெட்டது எதுவுமே அளவோடு இருந்தால் நல்லது என கூறியுள்ளார்.
