சமீபத்தில் தெலுங்கு திரை உலகில் வெளியான “கோர்ட் வெர்சஸ் நோபடி” என்ற திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அப்படம் ரூ. 10 கோடி செலவில் எடுக்கப்பட்டதாகவும், ஆனால் பாக்ஸ் ஆபீஸில் ரூ. 57 கோடி வரை வசூலித்ததாகவும் கூறப்படுகிறது.
அப்படத்தை தமிழில் ரீமேக் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அப்படத்தில் கதாநாயகியாக நடிகை தேவயானியின் மகள் இனியா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் முக்கிய கதாபாத்திரமான பிரியதர்ஷி வேடத்தில் நடிகர் பிரசாந்த் மற்றும் கதாநாயகனாக 5 ஸ்டார் கதிரேசனின் மகன் கிருத்திக் நடித்துள்ளதாகவும், சாய்குமார் வேடத்தில் தியாகராஜன் ஆகியோரும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தகவல்கள் உண்மையாக இருந்தால் நடிகர் பிரசாந்தும் அவரது தந்தை தியாகராஜனும் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒன்றாக இணைந்து நடிப்பதை காணலாம்.
