பேஷன் ஷோக்கள், திரைப்பட விழாக்கள் போன்றவற்றில் மாடல்கள், நடிகைகள் விதவிதமான ஆடைகள் அணிந்து பங்கேற்பது வழக்கம். சில நேரம் நீளமான ஆடைகளை அணியும்போது அவை தரையில் படாமல் இருக்க பெண் உதவியாளர்கள் அந்த எஞ்சிய ஆடைகளைத் தூக்கிப் பிடித்தபடி அவர்களின் பின்னால் வருவார்கள். இப்போது நடந்து வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் பங்கேற்ற போது அலுமினியம் மற்றும் கிரிஸ்டலில் உருவாக்கப்பட்ட நீளமான ஆடை ஒன்றை அணிந்து ரெட் கார்ப்பெட்டில் நடந்து வந்தார்.

இந்நிலையில் அவரது ஆடையை ஆண் உதவியாளர் ஒருவர் பிடித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளிவந்தது. இதையடுத்து அந்த புகைப்படத்தை பகிர்ந்து “காஸ்டியூம் அடிமைகள்” என காஷ்மீர் பைல்ஸ் படத்தின் இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி கோபமாக குறிப்பிட்டுள்ளார். மேலும் என்னுடைய கருத்துக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது ஆடை அடிமைத்தனம் எனும் கருத்தைப் பற்றியது ஆகும். அதற்கு அவர் பொறுப்பு இல்லை. அவர் ஒரு மாடல், பேஷன் தூதுவர்” என  விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி குறிப்பிட்டுள்ளார்.