இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் இருக்கும். குறிப்பாக செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகள் குறித்த வீடியோக்கள் தினம்தோறும் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு இணையத்தில் தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

பொதுவாகவே பாம்புகள் என்றால் அனைவருக்கும் ஒரு அச்சம் இருக்கும். தற்போது பார்த்ததும் பகீர் கிளப்பும் வகையில் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. அதாவது குட்டி பாம்பு ஒன்றை மோதிரம் போல ஒருவர் அணிந்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாம்பு ஒன்று அந்த நபரின் விரலை சுற்றிக்கொண்டு அங்கே ஊர்ந்து ஊர்ந்து செல்வதை பார்த்தால் பயமாக உள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.