சேலம் விமான நிலையத்திலிருந்து விமான சேவைகளை தொடங்க உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அதற்கான பயன அட்டவணையை தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சேலத்தில் இருந்து தினசரி விமான சேவையை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் வருகின்ற அக்டோபர் 29ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து விமான சேவை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு www.goindigo.in என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.