2024 பிப்.8, 9, 10ம் தேதிகளில் சென்னையில் தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடைபெறும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். மறைந்த முன்னாள் CM கருணாநிதியின் தலைமையில் 1999ல் ‘தமிழ்இணையம்99’ மாநாடு நடத்தப்பட்டு 25 ஆண்டுகளுக்குப் பின் இப்போது மீண்டும் அரசு இந்த மாநாட்டை, அதே நாளில் முன்னெடுக்கிறது. இது தமிழை காப்பதற்கும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கும் பெரிய வாய்ப்பாக அமையும் என்று CM கூறியுள்ளார்.

‘தமிழ் இணையம் 99’ மாநாட்டின் விளைவாக உருவானதுதான் தமிழ் இணையக் கல்விக்கழகம். உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இணைய வழியில் தமிழ் கற்றுக்கொடுத்தல், கணினித் தமிழை மேம்படுத்துதல் ஆகியவை தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் முதன்மையான பணிகளாகும். இம்மாநாட்டில் பங்குபெற்ற வல்லுநர்களின் வழிகாட்டுதலோடு ‘தமிழ்99 விசைப்பலகை’ உருவாக்கப்பட்டு, அரசால் அங்கீகரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது