“மகாராஜா” படத்தை இயக்கிய இயக்குனர் நிதிலன் சாமிநாதன். அந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. மேலும் ரூ. 120 கோடிக்கு மேல் வசூலித்த திரைப்படம், சீனாவிலும் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.

மேலும் மகாராஜா திரைப்படம் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து நிதிலனின் அடுத்த படத்தில் நடிக்கப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் இயக்குனர் நிதிலன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைய போவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தை முடித்த பிறகு இத்திரைப்படத்தின் பணிகளை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இயக்குனர்கள் எச். வினோத் மற்றும் விவேக் ஆத்ரேயா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் நடிகர் ரஜினிகாந்த் யாருடன் தனது அடுத்த படத்தை நடிக்க உள்ளார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.