தமிழக பாஜக தலைவர்கள் கந்த சஷ்டி தொடர்பாக நெகிழ்ச்சியுடன் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பாஜக கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கந்த சஷ்டி பாடலை முருகனை நினைத்து மனமுருகி பாடியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோவை தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டு ஒரு பதிவையும் போட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

சக்திவேல் ஏந்திய குமரனுக்கு உகந்த திதியான சஷ்டியும், கந்தனுக்கு உகந்த நட்சத்திரமான கார்த்திகையும் இணைந்துள்ள இன்றைய நாளில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என்ற உறுதியை ஏற்று “கந்த சஷ்டி கவசம்” பாடி முருகனை போற்றுவோம்.

அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் கந்த சஷ்டி கவசம் பாடி, முருகப்பெருமானின் பேரருள் உலக மக்கள் அனைவருக்கும் கிடைத்திட மனதார பிரார்த்திப்போம் என்று பதிவிட்டுள்ளார்.