சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த இரு தினங்களாக உயர்ந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 920 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,25,280 ரூபாய்க்கும், ஒரு கிராம் 15,660 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூயதங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 17,083 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,36,664 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை இன்று கிராமுக்கு பத்து ரூபாய் குறைந்து ஒரு கிராம் 315 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 3,15,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சேர்ந்து 10920 ரூபாய் குறைந்துள்ளது நகைப் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.