பொதுவாகவே பாம்புகள் என்றால் அதிக விஷத்தன்மை கொண்டவையாக இருக்கும். அதனால் மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயப்படுவார்கள். ஆனால் பாம்புகள் சில நேரங்களில் மனிதர்களைப் போல அறிவாக செயல்பட்டாலும் சில நேரங்களில் கோபத்தை வெளிக்காட்டும். அதேசமயம் சில நேரங்களில் சமையலறை மற்றும் வாகனங்கள் என பல இடங்களில் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தவும். சிலர் இதனை கையில் எடுத்து விளையாடுவதையும் அதன் மீது படுத்து உறங்குவதையும் அடிக்கடி வீடியோவாக பார்த்து வருகிறோம்.

அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில், இளைஞர் ஒருவர் தனது வெறும் கைகளை பயன்படுத்தி பெரிய பாம்பை அசால்டாக பிடிக்கிறார். நம்ப முடியாத திறமை மற்றும் அச்சமின்மையை வெளிப்படுத்தி பாம்பை அதன் வாலால் பிடிக்கின்றார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Yash Gupta இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@_yashhh._illy)