மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் உள்ள காளியாசோட் அணையில், நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் நேரடி வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
1 நிமிடம் 23 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், ஒரு இளைஞர் கரையில் நின்றார். அப்போது, நீந்திக் கொண்டிருந்த மற்றொரு இளைஞர் திடீரென காணாமல் போனார். நண்பர்கள் தேடியும் அவர் எங்கும் கிடைக்கவில்லை.
मध्य प्रदेश | भोपाल के कलियासोत डैम में नहाने गए युवक की डूबने से हुई मौत, दोस्तों ने बनाया वीडियो #MadhyaPradesh #Bhopal #viralvideo #MPNews pic.twitter.com/vR08kuZYyO
— Vistaar News (@VistaarNews) July 8, 2025
உணர்ச்சிகரமான இந்த சம்பவம் திங்களன்று காலை நடந்ததாக கூறப்படுகிறது. விபத்து நேரம், மூன்றாவது இளைஞர் ஒருவர் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தார். அந்த வீடியோவில் குளிக்க சென்ற இளைஞர் தண்ணீரில் படிப்படியாக ஆழமாக சென்று, தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் நீரில் மாயமானதைக் காணலாம்.
இதுகுறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து, டைவர்ஸ் உதவியுடன் அவரது உடலை மீட்டனர். இந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பெய்துவரும் கனமழையின் பாதிப்புகளுக்கிடையே இடம்பெற்றுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்வதால், மாநிலம் முழுவதும் ஆறுகள், ஓடைகள் வெள்ளப்பெருக்குடன் வழிகின்றன.
பல மாவட்டங்களில் நீர் நிலைகள் அதிகரித்து, வெள்ளம் போன்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அணைகள், ஆறுகள், பெருக்கெடுக்கும் பகுதிகளில் செல்லவேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம், சமூக ஊடகம் வழியாக வீடியோ எடுப்பதற்காக உயிரை ஆபத்தில் விடக்கூடாதென்பதை மீண்டும் நினைவூட்டுகிறது.
