பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியா, தனது ‘அமேசான் நவ்’ சேவைக்காக வெளியிட்ட புதிய விளம்பரத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற பண்டைய கால கணித மேதையான ஆரியபட்டரைச் சித்தரித்த விதம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்த விளம்பரத்தில் ஆரியபட்டர் நவீன காலத்திற்கு வருவது போலவும், அமேசான் நிறுவனம் தனது ‘பூஜ்ஜியம் டெலிவரி கட்டணம்’, பூஜ்ஜியம் கையாளுதல் கட்டணம் போன்ற வணிகச் சலுகைகளை விளம்பரப்படுத்த ஆரியபட்டரின் ‘பூஜ்ஜியம்’ கண்டுபிடிப்பை ஒப்புமைப்படுத்துவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

“>

மேலும் இந்தியாவின் அறிவியல் பாரம்பரியத்தையும், உலகிற்குப் பூஜ்ஜியத்தை வழங்கிய மாபெரும் அறிஞரையும் வெறும் வணிக நோக்கத்திற்காக மிகச் சாதாரணமாகவும், நகைச்சுவை என்ற பெயரில் அவமதிக்கும் வகையிலும் அமேசான் சித்தரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த விளம்பரத்திற்கு எதிராக இந்து ஜனஜாக்ருதி சமிதி என்ற அமைப்பு அமேசான் நிறுவனத்திற்குத் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளதுடன், 48 மணி நேரத்திற்குள் இந்த விளம்பரத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் மற்றும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இதனால் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய கலாச்சாரம் மற்றும் வரலாற்று நாயகர்களைக் கையாளும்போது கூடுதல் பொறுப்புடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.