லண்டன் மாநகரின் மையப்பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கும் அங்கிருந்த மற்றவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அந்தப் பாகிஸ்தான் இளைஞர்களில் ஒருவர் அங்கிருந்தவர்களிடம் வம்பிழுத்து, அதீத தைரியம் (Macho) காட்டுவது போலச் செயல்பட்டார். நிலைமை மோசமாவதை உணர்ந்த அவருடன் இருந்த மற்றொரு நண்பர், அவரைத் தடுத்து அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றார். ஆனால், அதற்குள் ஆத்திரமடைந்த அங்கிருந்த கும்பல், வம்புக்கு வந்த நபரையும் அவரைத் தடுக்க முயன்ற நண்பரையும் சேர்த்து சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.
Pakistani guys battered in London. Initially, they tried to act macho, but things escalated in a couple of seconds 😂
Now Team Sadiq and the Met Police will arrest the other guys within minutes as they hit Khan's supporters 😂 pic.twitter.com/jm1jtePGiL— Harman Singh Kapoor (@kingkapoor72) January 4, 2026
இந்தக் காட்சியைப் பார்த்த நெட்டிசன்கள், லண்டன் மேயர் சாதிக் கான் மற்றும் காவல்துறையின் செயல்பாடுகளைக் கிண்டல் செய்து வருகின்றனர். வம்புக்குப் போன நபர் மற்றும் அவரைத் தடுத்தவர் என இருவருமே மேயர் சாதிக் கானின் ஆதரவாளர்கள் என்றும், அவர்களைத் தாக்கியவர்களை லண்டன் மெட் போலீஸ் அடுத்த சில நிமிடங்களிலேயே தேடிப் பிடித்துக் கைது செய்துவிடும் என்றும் சமூக வலைதளங்களில் நையாண்டியாகப் பதிவிட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் பந்தாவாகத் தொடங்கி, இறுதியில் தடுக்க வந்தவருக்கும் சேர்த்து அடி விழுந்த இந்த வீடியோ, தற்போது இணையத்தில் பலரது சிரிப்புக்கும் விவாதத்திற்கும் உள்ளாகி வருகிறது.
