மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர், தற்போது ஒரு மிகப்பெரிய உலகப் போராக உருவெடுக்கும் அபாயத்தை எட்டியுள்ளது.
ஈரானின் அத்துமீறல்களால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளான சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகள், தற்போது நேரடியாகப் போரில் இறங்கத் தயாராகி வருகின்றன.
சவுதி அரேபியா தனது ‘கிங் ஃபஹத்’ விமானப்படைத் தளத்தை அமெரிக்கப் படைகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல், அமீரகமும் தனது நாட்டில் உள்ள ஈரானுக்குச் சொந்தமான மருத்துவமனை மற்றும் கிளப்புகளை மூடி ஈரானுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.
இந்த மோதலால் உலக நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் ‘ஹார்முஸ் நீரிணை’ மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்துப் கவலை தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்பைத் தொடர்பு கொண்டு பேசி, உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்காத வகையில் ஹார்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
