இன்றைய காலத்தில் பலர் தங்களின் பயணத்திற்கு விமானப் போக்குவரத்தையே அதிகம் விரும்புகின்றனர். பயணிகளின் வசதி, சேவை மற்றும் கட்டண மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த விமான நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.

தரமான உணவு மற்றும் நவீன வசதிகள் மூலம் பயணிகளைப் பெரிதும் கவர்ந்ததால் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.இந்த வரிசையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் கேத்தே பசிபிக் நிறுவனங்கள் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளன. சிறந்த இருக்கை வசதி மற்றும் நம்பகமான சேவைக்காக இந்த நிறுவனங்கள் பாராட்டப்பட்டுள்ளன. ஆனால், இந்த உலகளாவிய பட்டியலில் இந்திய விமான நிறுவனங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ போன்ற நிறுவனங்கள் தங்கள் சேவைகளை மேம்படுத்தி வந்தாலும், சர்வதேச தரத்திலான பயண அனுபவத்தை வழங்குவதில் அவை இன்னும் பின்தங்கியே உள்ளன.